Monday, 15 December 2025

படிக்கப் படிக்க

கூடக் கூடத்தான் கூட்டல்.

படிக்கப் படிக்கத் தானே நல்லாப்
பாடம் விளங்குது.
பாடப் பாடத் தானே பாட்டும்
இனிமை யாகுது.

செதுக்கச் செதுக்கத் தானே சிலையும்
சிற்ப மாகுது.
வடிக்க வடிக்கத் தானே கவிதை
வண்ணம் மிளிருது

பார்க்கப் பார்க்கத் தானே அழகு
இரசனை ஆகுது.
கோரக்க கோர்க்கத் தானே மாலை
கூடிச் சொலிக்குது.

வார்க்க வார்க்கத் தானே எதுவும்
வடிவம் வளருது.
சேர்க்க சேர்க்கத் தானே செல்வம்
வளமை கூடுது.

ஊட ஊடத் தானே காதல்
தேட்டங் கொள்ளுது
கூடக் கூடத் தானே இன்பம்é
கூட்ட லாகுது.

பழகப் பழகத் தானே நெஞ்சம்
ஆழம் புரியுது.
விலக விலகத் தானே காதல்
வலிமை தெரியுது.

தேடத் தேடத் தானே உறவு
திரண்டு வருகுது.
நாட நாடத் தானே காதல்
கனிந்து மணக்குது.

மணக்க மணக்கத் தானே மனது
மயக்கம் அடையுது.
மயங்க மயங்கத் தானே காதல்
மனதில் இனிக்குது.

கொ.பெ.பி.அய்யா.