Wednesday, 6 August 2014

உனனை உனக்குள் தேடு.



புதிய கீதை.(1)

உன்னையே நீயும் உனக்குள்ளே தேடென்றே
வெண்ணைத் திருடன் விளக்கிய கீதையே
கண்ணைத் திறந்தது காண்டீபன் வில்லையே
மண்ணைப் புதுப்பித்தும் மாற்றமும் கண்டதே.

விவிலியம் குரான் விளக்கும் மறைகள்
அவசரம் கூறிடும் அற்புத நெறிகள்.
அவதார அவசியம் ஆற்றும் குறிகள்
நவயுகம் செய்யும் நீதியின் மொழிகள்.

கீதை விவிலியம் குர்ரான் புனிதமே!
பாதை பழக்கிய பண்பினை நனிதுமே!
ஆதி முதலது அன்பினை அமைக்குமோ?
வேதம் அதுதான் என்பதை சமைக்குமோ?

தர்மம் உலகில் தவிக்கும் பொழுதெலாம்
கர்மம் விலக்கிக் கருக்கும் பொழுதெலாம்
மர்மம் துலக்கி மருவிப் பிறக்குமாம்
துர்மம் அழிக்கப் புதியதாய் கீதைகள்.

அதர்மம் அழிக்கும் அவதாரம் கண்ணன்.
அநீதி ஒழிக்கும் அவசரம் ஏசன்.
ஈகை இரக்கம் எனவும் நபிகள்ஆம்
ஆகமம் தந்தும் அகிலம் அமைத்தர்.  

தாயைப் பழித்திடும் பாவம் படர்வதும்.
சேயை ருசிக்கும் அவலம் தொடர்வதும்
கொள்ளை கொலையும் கொள்வதும் தொழிலோ?
கள்ளமும் கலையும் பேணுதும் எழிலோ!!
  
பாவமோ தர்மம்! பலியிடும் சாபமோ!
கோபமோ கர்மம்! கொலைபடும் நாசமோ!
இன்னொரு தூதன் எழுச்சியும் மெய்யாமோ!
பின்னொரு வேதம் புரட்சியும் செய்யாமோ!


கொ.பெ.பி.அய்யா.

   


Sunday, 16 March 2014

எல்லாம் இரண்டே.

எல்லாம் இரண்டே!!

நேரும் எதிரும் நிலவாதிங்கே  
நிசங்கள் இல்லை இயற்கையிலே.
சேரும் சேரா எண்ணாதிங்கே
செம்மை இல்லை படைப்பினிலே.

காற்றும் நீரும் வேண்டாமலே
ஆற்றும் உயிர் இங்கில்லை.
சூடும் குளிரும் தீண்டாமலே
சுகமும் இல்லை பூமியிலே!

கருப்பு வெள்ளை மூலமில்லா
கண்கள் இரண்டில் காட்சியில்லை.
விருப்பு வெறுப்பு விளக்கமில்லா
அற்புதம் ஏதும் இங்கில்லை.

வானும் மண்ணும் இரண்டுமில்லா
வளமுமில்லை இயற்கையிலே
ஆணும் பெண்ணும் இரண்டுமில்லா
வாழ்வுமில்லை படைப்பினிலே.

இன்பம் துன்பம் கலப்பில்லாமல்
இங்கும் வாழ்க்கை இதமில்லை.
காதல் மோதல் உரசாமல்
கடக்கும் பயணம் சுவையில்லை.

இப்படி அப்படி என்றே எல்லாம்
இரண்டு விதமும் சமாதானம்.
பழகும் இலக்கணம் .ஏற்பதால்
பிழையும் சரியே நன்மையெனில்.

எல்லாம் இரண்டாய் இருப்பதினாலே
வல்லான் படைப்பும் வாழுதிங்கே.
அல்லும் பகலும் தொடர்வதினாலே
இல்லை சலிப்பும் இனிதே சுகமே!


கொ.பெ.பி.அய்யா.

Thursday, 13 March 2014

வண்ணப் பொய்.

வண்ணப்பொய்!

என்னை நான் அறியவும் இன்னும் புரியவில்லை
உன்னை யேன்  புரியவும் உணர்கிறேன் அறியவில்லை.
கண்ணை நான் கேட்கிறேன் காண்ணாடி முன்னே
என்னை நான் பார்க்கிறேன் என்ன தான் கண்ணே?

யாருக்கும் யாரும் நேரென்றும் இல்லை
பேருக்குப் பேரும் பொருளொன்றும் இல்லை.
அவரவர் தானே அவரவர் ஆவார்
அடையாளம் ஒன்றில் அவராகியிருப்பார்.

அடித்தாலும் அணைத்தாலும் அழியாது தடமே
படித்தாலும் தடித்தாலும் பழகாது இடமே
இயல்பான குணமொன்று எப்போதும் நிசமே
அயலான பயிற்சியெல்லாம் அமையாது வசமே!

கல்வியென ஒன்றது கருத்துக்குத் தெளிவுதான்.
சொல்வதில் கண்டதுவும் சுயத்திற்கு அறிவுதான்.
தன்னிலை என்பதில் பின்னிலை நேராது.
ஒன்னிலை ஒருவற்குள் என்னிலையும் மாறாது.

நாயெனப் பிறந்ததை நன்றிக்கு நம்பலாம்`
நரியெனப் பிழைப்பதைத் தந்திரம் எண்ணலாம்.
பாயும் புலிகண்டும் உயிர்காக்க ஓடலாம்.
பொய் வண்ண மனிதனிடம் என்னவென்றும் தப்பலாம்?

சொல்லினில் வருவதை சுயமென நம்புவது
கல்லினில் விளைவதைக் கதையெனச் சொல்வது
உள்ளிருக்கும் உள்ளதை உதடுகளில் மறைவதை
சொல்லெடுக்கக் கற்றவரார்?
முள்ளெடுக்க உற்றவரார்?

புரியாத புதிரொன்றும் புவியினில் உண்டென்றால்
குறியிலாப் படைப்பொன்றும் குறிப்பிடக் கூடுமென்றால்
அறிந்திட விளங்காத அதிசயம் ஒன்றென்றால்
தெரிந்திட மனிதெனென திரிந்திடும் இனமன்றோ!

கொ.பெ.பி.அய்யா.




Wednesday, 26 February 2014

பிறர் சொல் மயக்கம்.

சோராதே கண்ணே!

சோராதே கண்ணே சோராதே—பிறர்
சொல்லிலே மயங்கியும் சோராதே !(சோரா)

அழகுப் பேச்சும் எழுத்தும் நாடகம்—உன்
அறிவைக் கழுவும் பொய் வேடம்.
துடிப்பை உன்னிடம் சுரண்டவே நடிப்பார்
தோளுக்கு உயர்ந்தால் தூக்கியும் அடிப்பார். (சோரா)

நல்ல மனிதரெல்லாம் கள்ளம் அறியாமல்
பள்ளம் விழுந்துமே தொலைந்துவிட்டார்.
உள்ள பொழுதினை உனக்காய் வாழ்ந்து
வெல்லும் வழியினை விரைந்தே செய்க .
விழித்துக் கொண்டால் நீயும் பிழைத்துக்கொள்வாய்—
உழைப்பை மறந்தாலென்றும் தோற்றே அழிவாய்.

ஊர் நலத்திற்கு வாழ்வதில் பிழையுமில்லை—ஒரு
உண்மைக்கு சாவதில் இழப்புமில்லை.
தனியொரு உயர்வில் நன்மையில்லை—நல்ல
தலைமைக்கு அதுவும் பொருத்தமில்லை.-தூய   
கடமை உணர்வின்று தொலைந்ததினால்--பொது
உடைமைகள் சுயநலம் ஆகுதப்பா!


  

Monday, 24 February 2014

அழகின் பொருள்.

அழகென்றால் .............!

அழகென்ற சொல்லுக்குப் பொருளென்ன ?
அதையளந்தவன் சொன்னவன் பேரென்ன?
நிலையாய் நெஞ்சில் நிற்பதெல்லாம்
அழகே என்றால் சரி தானோ!

கவனம் ஒன்றில் கவரும் என்றால்
காண மீண்டும் ஈர்க்கு மென்றால்
யவனம் அதுதான் பொருளென்றால்
சிவப்பு நாவு  செந்தீயும் அழகன்றோ!

முழுமை பெற்ற சிறப்பெல்லாம்
அருமை என்று மனம் மகிழ்ந்தால்
அறிவின் வெற்றி அது வென்றால்
அதுவும் அமைதி அழகன்றோ!

கண்டதில் மேன்மை கொண்டதுதான்
கொண்டதில் நன்மை என்றதுதான்
உண்டதில் சுவையும் உயர்ந்ததுதான்
நின்றது அதுவே அழகன்றோ!

ஆடும் கடலும் ஓடும் நதியும்.
வீசும் தென்றல் கூசும் பனியும்
மேடும் முகிலும் கூடும் விதமும்
ஆசை அசைவில் அழகன்றோ!

வாசம் வண்ணம் நேசம் நெகிழ்ந்தால்
பேசும் எண்ணம் பாசம் திகழ்ந்தால்
மலரும் மொழியும் மனது நிறைந்தால்
புலரும் இரவும் அழகன்றோ!
.
மென்மை என்றால் பெண்மையே!
இன்மை சொர்க்கம் காதலே!
மென்மை பெண்மை இன்மையில்
என்றும் அதுவே அழகன்றோ!

கொ.பெ.பி.அய்யா.












Saturday, 22 February 2014

நிறமென்ன சொல்லும்.

நிறமென்ன பாவம்?

கருப்பா வெள்ளையா நிறத்தில் என்ன
இருக்கும் இரகசியம் பெண்ணே!
வெறுக்கும் விதத்தில் நிறம்மென்ன பாவம்?
விருப்பும் எதனில் விளைந்தது கண்ணே?

உழைக்கவும் ஓயவும் பகலும் இரவும்
ஒன்றில் ஒன்று நன்மையே இருக்கும்.
அழகு என்பதும் நிறத்தில் இல்லை
அதனதன் செயலில் தானது விளங்கும்.

தோலில் என்ன பேதம் சொல்லும்.?
தோன்றுவ தென்ன வாதம் செல்லும்?
ஈர்ப்பு என்பதும் நிறத்தில் இல்லை.
இயல்பின் அருமை என்பதில் துலங்கும்..

கண்ணில் காணும் கருப்பு வெள்ளை
எண்ணில் தோணும் இரண்டும் நன்மை.
ஒளியும் என்பதும் நிறத்தில் இல்லை.
விழியன் பெருமை விதத்தில் இலங்கும்.

நிறங்களின் காட்சி ஒளியின் மாட்சி.
விரைவின் நீட்சி நிறைவின் சாட்சி.
அறிவு என்பதும் நிறத்தில் அல்ல
செறிவின் திறமாய் சீரில் முழங்கும்.

இயற்கை செய்யும் மாயம் எல்லாம்
ஏதோ ஒன்றில் நியாயம் கொள்ளும்.
இனிமை என்பதும் நிறத்தில் இல்லை.
இதயம் பழகும் இதத்தில் புழங்கும்.

கொ.பெ.பி.அய்யா.






Friday, 21 February 2014

கேள்விக்கென்னவிடை?

கேள்விக்கென்ன விடை.

நீலவானத் தந்தையின் நிழலிலா?
நில மடந்தை அன்னையின் மடியிலா?.
கால பகவன் கருணைக் கொடையிலா?
வாழும் மனிதன் வாழ்க்கை இடையிலா?

யாரையும் கேட்டுத் தான் வந்தானா?
ஊரையும் தேடித் தான் கண்டானா?.
பேரென்ன ஊரென்ன பிறப்புக்கு முன்னேதான்?
யாரென்ன சீரென்ன இறப்புக்குப் பின்னேதான்?

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைவெளி தூரமா?
உறவுக்கும் பிரிவுக்கும் நடைவழி பாரமா?
இருக்கவும் பறக்கவும் எது அது நேரமா?
பிறக்கவும் மறக்கவும் விதி எங்கே ஓரமா?

நாளென்ன பொழுதென்ன நாழிகைக் கணக்கென்ன?
ஊழென்ன தொழுதென்ன உற்றது உனக்கென்ன.?
வாழவும் வீழவும் வந்ததன் சிறப்பென்ன?
ஆளவும் தாழவும் ஆசையின் பொருளென்ன?

காதலென வொன்றுதான் கருவிலே வந்தததா?
சாதிபின் பொருளாலே சண்டாளம் நுழைந்ததா?
வேதங்கள் காதலுக்கு வேலியிட முளைத்ததா?
சாதலே விடுதலையா சாத்திரங்கள் பிழைத்த’தா?

கேள்விக்கென்ன விடையுண்டோ கேட்டுயார் சொல்லுவீர்?
கோளுக்குள் வேறென்ன கொண்டாடும் காதல் என்பீர்!
நாளில்லை பொழுதில்லை நமக்கிங்கு நிலையென்ன?
தோணையும் காதலன்றி துணையிங்கு வேறென்ன?

கொ.பெ.பி.அய்யா.

குறிப்பு:--அன்பர்களே!
 “கரிசல் மண்ணில் ஒரு காவியம்”
அத்தியாயம்—12
வெளியாகியுள்ளது.படித்துத்தான் சொல்லுங்களேன்!








Thursday, 20 February 2014

நதிமூலம் எதற்கு?

நதி மூலம் தேடவேண்டாம்.
//////
இப்படித்தான் சிலர் இன்னும் ஏனோ மாறவில்லை.
என்ன வேண்டும் இவர்களுக்கு?ஏதும் புரியவில்லை.
அப்படியும் இப்படியும் எப்படியும் இவரில்லை.
அர்த்தம் சொல்லித் திருத்திடவும் ஆவதில்லை..
////////
நன்மை என்ன தீமை என்ன நாலும் தெரிந்திருப்பான்
உண்மை அதை மறுப்பதற்கும் உள்ளொன்றும் செய்திருப்பான்.
தீமை என்றே தீர்த்ததையும் நன்மை என்றும் நட்டிவைப்பான்.
நன்மை எனத் தேர்ந்ததிலும் தீமை ஒட்டிப் பொயப்பான்’
/////////
நல்லதொன்று செய்தாற்குப் பொல்லதெல்லாம் சாட்சி வைப்பான்.
உள்ளபடி நல்லததை ஒப்புக்கொள்ளப் பொய்யுரைப்பான்.
நல்லதென்ற சொல்லிவற்கு பொல்லாத ஒவ்வாமை.
வல்லமை அதிலென்ன வரவாகும் இவர் பெருமை?
///////
கேடுவரும் என்றறிந்தால் கூடியெல்லாம் எதிர்க்கலாம்
தேடி வரும் நன்மைதனை தேவையென்ன எதிர்ப்பதால்
தெருவாடத் தெரியாதவன் தெருக்கோணல் என்பானாம்.?
வரும் நன்மை வரவேற்க வலிமையற்றோன் கோழையாம்.
/////////
மனதிலொன்றை வைத்துகொண்டு மற்றவரை வம்பிழுப்பான்
சனத்திலொன்றை சொல்லிக்கொண்டு உற்றதையும் மெய்மறுப்பான்.
தனக்கிலான லாபநட்டம் கணக்கிலதை மட்டும் பார்ப்பான்.
தனக்கிலது நட்டமானால் பிணக்கியதை தான் கெடுப்பான்.
///////
நிச்சயம் உறங்குபவன் நிழல்படவும் விழித்திடுவான்.
நித்திரை போல் பாசாங்கன் நெருப்பிட்டும் எழமாட்டான்.!
பத்திரமாய் பொய்யர்களை பழகித்தான் பேசவேண்டும்`
சத்தியமாய் மனிதெரென சகலரையும் நம்பவேண்டாம்.
////////
நன்மையது உண்மையானால் நதிமூலம் தேடவேண்டாம்.
தன்மையது செம்மையானால் தன்னலம் சேரவேண்டாம்.
பன்மையது பாராட்டி பழிப்பவனைத் தள்ளிவிட்டு
திண்மையது மனங்கொண்டு தேர்ந்ததில் வெற்றி கொள்வோம்!
///////////
கொ.பெ.பி.அய்யா..

Tuesday, 18 February 2014

தொட்டில் பழக்கம்.

தொட்டில் பழக்கம்

தொட்டில் வந்த பழக்கமடா!
சுடு காடு மட்டுமாடா!!
நல்லதானால் நல்லதடா!
பொல்லதெனில் தொல்லையடா!

பழகும் வழி திறமையடா!
பழகுவதே பதியுமடா!
படிப்பதெல்லாம் பாடமடா!
பழகுவதில் புரியுமடா!

நல்லவனின் பழக்கமடா!
நல்லதொரு பாடமடா!
பொல்லாதோன் பழக்கமடா!
புதைக்குழிக்கு தள்ளுமடா!

அஞ்சதிலே வளைஞ்சதடா!
ஐம்பதிலே ஒடியாதடா!
பிஞ்சினிலே பழுத்ததடா!
நஞ்சாக்கும் நாசமடா!

சோகம் ஒரு சோதனையடா!
சோகம் மாற்றத் தூண்டுமடா!
தேடும் தீய மயக்கமடா!
தீரத் தீரத் தேடுமடா!

நல்ல குணம் கெடுவதடா!
நாழிகையும் அதிகமடா!
கெட்ட மனம் தேறாதடா!
சுட்ட பின்னும் நாறுமடா!

தொட்டில் குணம் நல்லததை
விட்டிடாது தொடர்ந்திடடா!
கெட்டதென உணர்ந்தாலதை!
விட்டுவிட முயல்வாயடா!

தீய வழி போகாதேடா!
தீயோர் முகம் பாராதேடா!
மாய வளை வீழாதேடா!
நேயங்கெட்டுத் தாழாதேடா!

கொ.பெ.பி.அய்யா.



https://www.blogger.com/home







உண்மையை மதிக்க!

வாழ்க பத்திரம்

வதந்தியும் ஒருநாள்
வாய்மை ஆகலாம்.
கதைகளுங்கூட
காட்சிகளாகலாம்.
சத்தியமதுவும்
புத்தியும் மாறலாம்.
பத்தினி அவளும்
சத்தியந் தவறலாம்.

நித்தியமில்லை
நிலையற்ற வாழ்வில்
பத்திரமாய் வாழ
பழகிடப் பழகு!
உத்தமம் ஆவது
உனக்குள்ளிருக்கு.
பத்தியக் காந்தியின்
பாதம் தொடர்க!

பிறர்க்கின்னா செய்யாது
பிழைபட வாழாது
பிறப்பது உலகின்
பேரெனக்கொண்டு
உறுதியில் நின்று
உண்மையை மதித்தால்
பெறுவது திண்ணம்
பிணியிலா வண்ணம்.

எப்படியும் வாழலாம்
என்பதை விடுத்து
இப்படித்தான் வாழ்வு
என்பது உணர்ந்து
அப்படி வாழ்ந்தால்
அகிலத்திற்கு சுகமே!
செப்படி இதுவே
சீர்பட உலகு!



சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.

வாழும்வரை வாழ்க!

வாழும் வரை வாழ்க

தப்பைத் தப்பாகாது செய்வாயோ!
தவறைத் தவறாகாது செய்வாயோ!
குற்றத்தைக் குற்றமாகாது செய்வாயோ!
வெற்றியும் உண்டோ சொல்!
எதைச் செய்தும் தப்புவாயோ!
எங்கே நீயும் ஒளிவாயோ!
அப்புறம் ஏன் அதைச் செய்வாய்?
அதனால் என்ன நன்மை ஆவாய்?

இன்று நீ கொலை செய்கிறாய்.
நாளை நீயே கொலை யாவாய்.
எத்தனை நாட்கள் வாழ்கிறாய்?
எமனும் உன்னை விடுவானா?
எதைத்தான் சாதித்தாயோ?
இப்புவிதான் நிலையாகுமோ ?
வாழ்வதே கொஞ்ச நாட்கள்.
வாழும் வரைவாழ்ந்து போ.

தர்மப்படி வாழ்ந்தால் என்ன!
தடைகள் உண்டோ சொல்லுங்கள் !
கர்மசுத்தி கடைப்பிடித்தால்
கடவுளின் பிள்ளையாவாய்.
பிறர்க்கின்னா செய்வதால்
பெருமை என்ன காண்பாயோ!
என்ன இங்கு கொண்டு வந்தாய்?
எதை அங்கு எடுத்துச் செல்வாய்?


கொ.பெ.பி.அய்யா .

விமர்சனமா? விளம்பரம?

விமர்சனமும் விளம்பரமே!

எதுவொன்று திருத்தப்படுகிறதோ
அதுவே தீர்க்கமடைகிறது.
எதுவொன்று விமர்சிக்கப்படுகிறதோ
அதுவே விளம்பரமடைகிறது.

திருத்துவோரும் விமர்சிப்போரும்
தேவனின் தூதுவர்கள்.
வருத்தவோ இதைச் செய்கிறார்!
வண்ணந்தீட்டி வரைகிறார்.

எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை
வல்லவராவாரக்கு வரமிது.
வேலையற்ற வேலையோவிது
மாலையேற்றும் விழைவிது.

சுட்டிக்குட்டி வளர்க்கப்பட்டால்
கெட்டியாகி வாழலாம்.
தட்டித்தட்டி திருத்தப்பட்டால்
வெற்றி பெற்றுயரலாம்.

செதுக்குவது சகித்திட்டால்
சிலையாகிச் சீர்படலாம்
இடிப்பாரே இல்லாதான்
கெடுவானே பாவமே!

சமூகக்கவிகொ.பெ.பிச்சையா.
















எங்கிதம்.

பயணம் தூரமோ!

எங்கே பயணம் என்னும் வினவலோ!
மங்கும் மொழியாய் மனதும் தயங்குமே!
நொங்கும் பார்வையும் நோங்கும் விதத்திலே!
இங்கிதம் இல்லையே என்பதைச் சொல்லுமே!

பயணம் தூரமோ பத்திரம் பத்திரம்.
அயனம் தோறும் அமையட்டும் நேத்திரம்.
பயணம் வாழ்த்திடும் பக்குவம் இத்திறம்.
வயணம் கூறிடும் வாய்மொழி சூத்திரம்.

வெளியே பயணம் நலமே யாகத்தான்
வழியே முன்னம் சகுனம் பார்க்கத்தான்
தாயுள்ளம் ஓடியும் வாயிலை சோதித்தும்
போய்வா மகனென வாய்மொழி சொல்லும்.

மனைவி மக்கள் நினைவில் நின்றும்  
நினைந்தும் உன்னில் அன்பினி லென்றும்
உனையே நம்பும் உயிராம் உனைத்தான்
நனைந்தும் அனுப்பும் நாளினை நினைக!

பத்திரம்! பத்திரம்! பலமுறை சொன்னதும்
முத்திரை பதித்தாயோ முன்நெஞ் சிலதனையும்!
பத்திரம் எண்ணா படிக்கட்டுப் பயணமோ!
உத்திரவாதம் தானோ உணர்ந்தும் அறிவாயோ.!

அவசரமும் வேண்டாம் அடுத்துத்தான் வாராதா?
அதுவரையும் பொறுத்து அடைவதும் நேராதா?
சுபவரம் வேண்டியும் சுற்றமும் தேடாதா?
அபத்தமும் உன்மனம் ஆவதும் எண்ணாதா?

எத்தனைதான் வல்லுனரும் இருப்பரோ உம்மிலேயும்!
எத்தனைதான் செலவளித்தும் இந்தியாவும் காத்திருக்கும்!
அத்தனையும் வீண்போக்கி ஆவதென் னவசரத்தால்
பத்திரமாய் போய்வாரீர் பல்லுயிர்க்கும் காப்பு நீவீர்!

கொ.பெ.பி.அய்யா.




எங்கே மனிதன்?


மனிதன் எங்கே?

மனிதன் என்றொரு மகத்துவம் எங்கே?
மனதன் என்றொரு சகத்துவம் எங்கே?
மனிதம் என்றொரு படைப்பும் எங்கே?
இனிதாம் என்றொரு விடையும் எங்கே?

மனிதன் அவனின் அடையாளம் எங்கே?
மனதின் அவனின் கொடைநலம் எங்கே?
மனமது அவனின் சிறப்பும் எங்கே?
குணமது அவனின் பிறப்பும் எங்கே?

மாவினம் விலகிய அனுபவம் எங்கே?
நாவிதம் பழகிய மனபவம் எங்கே?
காவினம் தேறிய சேர்தல் எங்கே?
தீவினை நல்வினை தேர்தல் எங்கே?

காலம் படித்த பாடங்கள் எங்கே?
கோலம் பதித்த ஞானங்கள் எங்கே?
மூலம் விதித்த கூடல்கள் எங்கே?
ஞாலம் விரித்த தேடல்கள் எங்கே?

ஆறாம் அறிவாம் ஆளுமை எங்கே?
கூர்மையும் புரிதலும் நேர்மை எங்கே?
ஊராம் உறவாம் உணர்வும் எங்கே?
தேறா மனிதம் தேறுதும் எங்கே?

இறைவன் இருப்பும் அறிவதும் எங்கே?
இதயம் மறந்தும் சிதைவதும் எங்கே?
உறைவதும் அறிவும் உனக்குள் எங்கே?
நிறைவதும் இறைவன் வேறிடம் எங்கே?

இறைவன் வாழும் இதயம் எங்கே?
மறையவன் கூறும் மனிதம் எங்கே?
சிறையென மாறும் சிந்தை அங்கே:
இறையெனும் நேர்மனச் சாட்சியும் எங்கோ!

ஓரினம் என்னும் உணர்வும் எங்கோ!
வேறினம் எண்ணும் வினையும் ஏனோ!
யாரினம் நண்ணும் நினைவும் எங்கோ?
சேரினம் துன்னா சிறுமை தானோ!

மனிதம் பழகா மடமை எதற்கோ!
புனிதம் விலகும் போர்க்குணம் எதற்கோ!
சகிதம் பகைத்தும் சாதிப்ப தெதுவோ!
உசிதம் தகர்த்தும் உயர்த்த லெதுவோ!

மூலம் தெளிந்தால் ஞானம் துலங்காதோ!
ஞானம் உணர்ந்தால் தானம் விளங்காதோ!
தாயம் ஒன்றென நேயம் அறியாதோ!
மாயம் மற்றென நியாயம் புரியாதோ!


கொ.பெ.பி.அய்யா.

சொந்தங்கள் எங்கே?

முடிவைத்தேடி............!!!!


சொந்தங்களை எங்கேயடா?
பந்தங்களும் எங்கேயடா?
முதுமைகூட வறுமையடா!
ஒதுங்குதெல்லாம் ஓரமடா!

உற்றதுணை பறந்ததடா!
பெற்றதுகள் மறந்ததடா!
சுற்றமுந் தொலைஞ்சதடா!
முற்றமுங் கலைஞ்சதடா!

நீரும் வற்றி ஓஞ்சதடா!
சேறும் ஒட்டிக் காஞ்சதடா!
தேருழுத்துச் சாஞ்சதடா!
சேரும் நாளுந் நோங்குதடா!

கண்ணுங்கெட்டு மறையுதடா!
காதும்பட்டுக் குறையுதடா!
ஒன்னுக்கொன்னு அடங்கலடா!
ஓஞ்சு எல்லாம் தடங்கலடா!

தென்னமரம் நிக்கிதடா!
என்னை உயிர் காக்குதடா!
முன்ன செஞ்ச நன்றியடா!
பின்னப் பலன் காட்டுதடா!

புன்னை மரம் பாக்குதடா!
திண்ணைக் காற்று வீசுதடா!
புண்ணை ஆற்றி ஊதுதடா!
என்னை நன்றி சொல்லுதடா!

நாயுமொன்னு சுத்துதடா!
நல்லசோறும் இல்லையடா!
பேய ஓட்டக் கத்துதடா!
பேயலையும் செத்தூரடா!

வற்றிவிட்ட வாடலடா!
கெட்டழுகும் சடலமடா!
இறைவா இது கொடுமையடா!
விரைவா என்னைக் கூப்பிடடா!

சமூகக்கவி கொ.பெ.பிச்சையா.












தோல்வி என்பது என்ன?

தோல்வி என்பது என்ன?

தம்பி தம்பி  நீ எழுந்து நில்லடா!!
தங்கக் கம்பி நீ நெளிந்து துள்ளடா! 
கண்டுக் கொண்ட நீ தொடர்ந்து செல்லடா!
நின்று வென்று நீ முயன்று சொல்லடா!

தோல்வி என்பது என்ன உண்டடா?
தோற்ப தென்பதும் ஒன்னும் இல்லடா!
வெற்றி என்பதே எட்டும் கோடடா!
தொட்டு முயல்வதும் தோல்வியல்லடா!

சொந்தப் பலத்திலே நம்பித் துணியடா!
அந்த வலிமையும் இன்னும் பலமடா!
வாலி பலத்திலும் பாதி உனக்கடா!
நாளை உலகிலும் மீதிக் கணக்கடா!

தோளை உயர்த்தி ஆளை நிமிர்த்தடா!
காளை சிலிர்த்தும் காலைப் பதித்தடா!
வேளை இதுவென வேட்டி மடியடா!
ஊழை மடமென உதறி முடியடா!

கெடுப்பா ருண்டு விடுத்து விலகடா!
சொடுக்கி யுன்னை முடுக்கி முனையடா!
படுத்திப் பழிக்கும் பக்கம் மறையடா!
அடுத்து அணைக்கும் அன்பர் துணையடா!

எடுத்தக் காரியம் தடுப்ப தென்னடா!
தொடுத்து வீரியம் மடுத்துப் பண்ணடா!
அடுத்து விளையும் அனுபவம் தானடா!
எடுத்து உனையும் ஏற்றும் படியடா!

கற்றக் கல்வியில் பெற்றதும் அறிவடா!
மற்றக் கல்வியில் உற்றதும் தொழிலடா!
நற்ற முயல்வினில் இட்டதும் செயலடா!
தொற்றும் வறுமையும் விட்டும் விலகடா!

நெஞ்சில் நம்பிக்கை தஞ்சம் தந்தடா!
அஞ்சும் எண்ணிக்கை விஞ்சி முந்தடா!
பஞ்சைப் போலவே பற்றிக் கொள்ளடா!
பஞ்சம் போக்கவே வெற்றி அள்ளடா!



கொ.பெ.பி.அய்யா.

கோபம் பொல்லாதது.

கவனம்---கோபம் பொல்லாதது.

கோபம் பொல்லாதது---அது
குழந்தையிடம் இல்லாதது.
வேகம் கூடாததுஅது
விபத்துக்கு ஆளாவது.

வார்த்தை கவனம் வேண்டும்
வழுக்கினால் மோசம் வரும்.
பார்த்துப் பேசவேண்டும்.
பழக்கத்தை மதிக்க வேண்டும்.

கோபத்தின் தீமைகளை
கோர்த்துத் தெளியவேண்டும்.
ஆபத்து அதுபோல் எதுவும்
அருகில் இருப்பதில்லை.

கோபம் துணிவதெல்லாம்
குழப்பும் முடிவுகளாம்.
பாவம் அறியாதாம்.
பழமையும் புரியாதாம்.

ஆத்திரம் தூண்டிவிடும்
அவசரக் கோபமது.
பாத்திரம் உன்னைத்தட்டி
பாலினைக் கொட்டிவிடும்.

ஆகும் நன்மையுண்டோ!
கோபம்  துணையுண்டோ!
காய்க்கனி இனிப்பதுண்டோ!
காய்ந்துறவும் மீள்வதுண்டோ!

சுட்டிப் பிறரைப் பேசாதே
சுருக்குச்சொல்லால் குத்தாதே!
சுட்டசொல்லும் வீசாதே!
கெட்ட கோபம் தூண்டாதே!

கட்டித்தனம் பேசாதே!
குட்டிச்சினம் சீண்டாதே!
மற்றவரை இழிக்காதே!
மனம் நோகச்செய்யாதே!

பிறர்க் கொண்ட குறைகளை
பிதுக்கி நீயும் ரசிக்காதே!
பலரும் கூடும் வெளியிலே
பழித்துப் பேசி இடிக்காதே!

அடுதாரைத் தரம் தாழ்த்தி
அவமானம் ஏற்படுத்தி
அதனாலே உனை உயர்த்தி
ஆவதுண்டோ பேர் நிறுத்தி.

மாற்றார்க்கும் உணர்வுண்டு
மறுப்பதற்கும் அறிவுண்டு .
மாறி மாறி தூற்றிக்கொண்டு
மானம்போனால் என்னவுண்டு.?

ஆதாரம் தேடிக் கண்டும் 
அதுவாய்ந்தும் முடிவெடுத்தும்
சேதாரம் இல்லாமல்
சீர்தூக்கி சினம் காப்பீர்!

நகைச்சுவை பழகுவீர்!
நயமுறப் பேசுவீர்!
உறவுகள் பெருக்குவீர்!
பிறவியிற் பேர் சிறப்பீர்!

அமைதியில் மனம் காத்து
அது அமையத் தியானித்து
மனிதம் அது தான் மதித்து
மன்னித்தும் உனை உயர்த்து.



கொ.பெ.பி.அய்யா.