Wednesday, 7 January 2026

சின்னப் பயலே நின்னு கேளடா!

சின்னப் பயலே நின்னு கேளடா!

சின்னப் பயலே சின்னப் பயலே!
நின்னு கேளடா!நான்
சொன்னப் பிறகு எண்ணி அதனை
மனதில் வையடா!நீ
மனதில் வையடா!

உன்னை நீயும் உயரம் பார்த்தும்
அளந்து பார்க்கணும்.அதற்கு
உன்னை வளர்க்க உதவும் பிறரை
உறவு தேடணும்.உன்
தோளும் தோளும் உரசும் தோழமை
உனக்கும் கூடனும்நீ .
நாளும் மேலும் வாழும் வாழ்வை
நாடி ஓடனும்.

உயரம் பார்த்தும் உன்னை நீயும்
உயர்த்திக் கொள்ளடா.- உன்னில்
உயர்ந்த மனிதரை மதித்து நீயும்
உறவு செய்யடா.உன்னை
ஒப்பும் உயரமும் செப்பும் தரமும்
உயர்த்தும் தானடாஇதை
உணர்ந்து நீயும் உன்னை வளர்த்து
உயர வேணுன்டா!

வாழ்ந்தும் நீயும் பாரடா-- புரியும்
வாய்ப்பும் வசதியும்உன்னை
அளந்தால் தானது உனக்கும் தெரியும்.
வாழ்வும் தாழ்வும்—முன்னை
உயர்ந்தவன் உன்னை வென்றான் என்பான்.
அவனை உயர்ந்தால்--உன்னை
அவனே தன்னை வென்றாய் என்பான்.
விளங்கிக் கொள்ளடா!

கொ.பெ.பி.அய்யா.`

Friday, 2 January 2026

கள்ளும் காமமும்

கள்ளும் காமமும்

சொல்லுவ தெல்லாம்
சொல்லி முடித்தும்
கள்ளுங் காமமும்
கலந்திடத் துணிந்தேன்.

காமம் மிகுந்தால்
நாணம் மறக்கும்.
கள்ளும் மிகுந்தால்
எல்லாம் மறக்கும்.

நினைந்திடக் காமம்
நெஞ்சை மயக்கும்.
அருந்திடக் கள்ளும்
அறிவை மயக்கும்.

ஊடலைக் காமம்
ஒளித்தே மறைக்கும்
கூடலைக் கள்ளும்
குழிக்குள் புதைக்கும்.

பிரிவினிற் காமம்
பெருகி உருக்கும்.
பருகிடக் கள்ளும்
உருக்கி யழிக்கும்.

காமம் துணிந்தால்
ஏமம் உடைக்கும்.
கள்ளும் முனைந்தால்
கோமணம் இழக்கும்.

சுற்றமும் மறக்கும்
முற்றியும் காமம்.
பெற்றவள் வெறுக்கவும்
பற்றிடுங் கள்ளும்.

அலரிய காமம்
களம் அறியாது.
உளற்செய் கள்ளும்
ஒழுக் கறியாது.

மிஞ்சிய காமம்
நெஞ் சடங்காது.
விஞ்சிடக் கள்ளும்
வெறி ஒடுங்காது.

பொருந்தாக் காமம்  
புலம்பித் திரியும்.
அருந்தாக் கள்ளும்
அவனைச் சொரியும்.

காமம் தொலைந்திட
கலங்கிடும் சித்தம்.
கள்ளும் நிறைந்திட
விலங்கிடும் பித்தம். 

காமம் மறந்தும்
கள்ளும் உண்டும்
சண்டைக்கு முனையுமீ
சண்டாளன் ஏனோ!

வாழ்வைத் தொலைத்தும்
வசையினைச் சுமந்தும்
நாளினை இழந்தும்
நடை பிணம் ஏனோ!

உழைப்பினை விற்று
உயிரினைத் தோற்று
அழையாச் சாவை
அழைப்பதும் ஏனோ!


கொ.பெ.பி.அய்யா.

பி.கு;-கள் எனும் சொல் பொதுவாக மதுவகைக்
குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளது.

Monday, 15 December 2025

படிக்கப் படிக்க

கூடக் கூடத்தான் கூட்டல்.

படிக்கப் படிக்கத் தானே நல்லாப்
பாடம் விளங்குது.
பாடப் பாடத் தானே பாட்டும்
இனிமை யாகுது.

செதுக்கச் செதுக்கத் தானே சிலையும்
சிற்ப மாகுது.
வடிக்க வடிக்கத் தானே கவிதை
வண்ணம் மிளிருது

பார்க்கப் பார்க்கத் தானே அழகு
இரசனை ஆகுது.
கோரக்க கோர்க்கத் தானே மாலை
கூடிச் சொலிக்குது.

வார்க்க வார்க்கத் தானே எதுவும்
வடிவம் வளருது.
சேர்க்க சேர்க்கத் தானே செல்வம்
வளமை கூடுது.

ஊட ஊடத் தானே காதல்
தேட்டங் கொள்ளுது
கூடக் கூடத் தானே இன்பம்é
கூட்ட லாகுது.

பழகப் பழகத் தானே நெஞ்சம்
ஆழம் புரியுது.
விலக விலகத் தானே காதல்
வலிமை தெரியுது.

தேடத் தேடத் தானே உறவு
திரண்டு வருகுது.
நாட நாடத் தானே காதல்
கனிந்து மணக்குது.

மணக்க மணக்கத் தானே மனது
மயக்கம் அடையுது.
மயங்க மயங்கத் தானே காதல்
மனதில் இனிக்குது.

கொ.பெ.பி.அய்யா.





Monday, 3 November 2025

மதங்களை மறந்து விடு.

எல்லாம் நன்மைக்கே!!

மதங்களுக்கு மதம் பிடித்துப்போனது.
மதங்கள் மடமைக்கு மாறிவிட்டது.-----அதனால்
மதங்களை நாம் மறந்துவிடுவோம்.

சமயங்கள் சரித்திரம் சொல்கிறது.
சமயங்கள் மரபின் கண்ணாடி-------அதனால்
சமயங்களை நாம் போற்றுவோம்.

பக்தியென்பது பயத்தின் வெளிப்பாடு.
பயந்தொலைந்தால் பாதை மாறிவிடும்-----அதனால்
பக்தி பரவிட நாம் முயல வேண்டும்.

கோவில்கள் கும்பிட மட்டுமல்ல
கூடிப்பழகுதற்கும் கூப்பிடுமே----அதனால்
கோவில்கள் கலைகளாக்கப்பட்டுள்ளன.

ஒழுக்கந் தொடர்வதற்காகவே
உருவாக்கப்பட்டன இவையெலாம்----அதனால்
ஒழுகுவோம் ஒன்றுபடுவோம்..


எல்லாம் நன்மைக்கே!!

மதங்களுக்கு மதம் பிடித்துப்போனது.
மதங்கள் மடமைக்கு மாறிவிட்டது.-----அதனால்
மதங்களை நாம் மறந்துவிடுவோம்.

சமயங்கள் சரித்திரம் சொல்கிறது.
சமயங்கள் மரபின் கண்ணாடி-------அதனால்
சமயங்களை நாம் போற்றுவோம்.

பக்தியென்பது பயத்தின் வெளிப்பாடு.
பயந்தொலைந்தால் பாதை மாறிவிடும்-----அதனால்
பக்தி பரவிட நாம் முயல வேண்டும்.

கோவில்கள் கும்பிட மட்டுமல்ல
கூடிப்பழகுதற்கும் கூப்பிடுமே----அதனால்
கோவில்கள் கலைகளாக்கப்பட்டுள்ளன.

ஒழுக்கந் தொடர்வதற்காகவே
உருவாக்கப்பட்டன இவையெலாம்----அதனால்
ஒழுகுவோம் ஒன்றுபடுவோம்..



எல்லாம் நன்மைக்கே!!

மதங்களுக்கு மதம் பிடித்துப்போனது.
மதங்கள் மடமைக்கு மாறிவிட்டது.-----அதனால்
மதங்களை நாம் மறந்துவிடுவோம்.

சமயங்கள் சரித்திரம் சொல்கிறது.
சமயங்கள் மரபின் கண்ணாடி-------அதனால்
சமயங்களை நாம் போற்றுவோம்.

பக்தியென்பது பயத்தின் வெளிப்பாடு.
பயந்தொலைந்தால் பாதை மாறிவிடும்-----அதனால்
பக்தி பரவிட நாம் முயல வேண்டும்.

கோவில்கள் கும்பிட மட்டுமல்ல
கூடிப்பழகுதற்கும் கூப்பிடுமே----அதனால்
கோவில்கள் கலைகளாக்கப்பட்டுள்ளன.

ஒழுக்கந் தொடர்வதற்காகவே
உருவாக்கப்பட்டன இவையெலாம்----அதனால்
ஒழுகுவோம் ஒன்றுபடுவோம்..

கொ.பெ.பி.அய்யா





Tuesday, 28 January 2025

இலவசம்.

இலவசம்!

எலக்சன் வந்தால் காசு 

மீண்டும்  எலக்சன் வந்தால் காசு கிடைக்கும்
இலவசம் என்றால் சோறு கிடைக்கும்.
ஒருநாள் பொழுதில் முடிஞ்சி போச்சா?
மறுநாள் பொழுது விடிஞ்சு ஆச்சா?

அடிமை வாழ்வின் விடுதலை வேண்டி
மடிந்தவர் கோடி உறவுகள் தாண்டி.
விண்ணில் மின்னும் மீன்கள் சொல்லும்
மண்ணில் என்றும் தியாகங்கள் வெல்லும்.


உரிமையை விற்பது கேவலமாகும்.
கடமையை மறப்பதும் பாவமாகும்.
மானம் உயிரென வாழும் மனிதரை
வாழும் சாமியாய் வணங்கி வாழ்வோமே!

வளர்ந்த பாரதம் வாழ்கவே!
புலர்ந்த மாரதம் வாழ்கவே!


கொ.பெ.பி.அய்யா.




Wednesday, 6 August 2014

உனனை உனக்குள் தேடு.



புதிய கீதை.(1)

உன்னையே நீயும் உனக்குள்ளே தேடென்றே
வெண்ணைத் திருடன் விளக்கிய கீதையே
கண்ணைத் திறந்தது காண்டீபன் வில்லையே
மண்ணைப் புதுப்பித்தும் மாற்றமும் கண்டதே.

விவிலியம் குரான் விளக்கும் மறைகள்
அவசரம் கூறிடும் அற்புத நெறிகள்.
அவதார அவசியம் ஆற்றும் குறிகள்
நவயுகம் செய்யும் நீதியின் மொழிகள்.

கீதை விவிலியம் குர்ரான் புனிதமே!
பாதை பழக்கிய பண்பினை நனிதுமே!
ஆதி முதலது அன்பினை அமைக்குமோ?
வேதம் அதுதான் என்பதை சமைக்குமோ?

தர்மம் உலகில் தவிக்கும் பொழுதெலாம்
கர்மம் விலக்கிக் கருக்கும் பொழுதெலாம்
மர்மம் துலக்கி மருவிப் பிறக்குமாம்
துர்மம் அழிக்கப் புதியதாய் கீதைகள்.

அதர்மம் அழிக்கும் அவதாரம் கண்ணன்.
அநீதி ஒழிக்கும் அவசரம் ஏசன்.
ஈகை இரக்கம் எனவும் நபிகள்ஆம்
ஆகமம் தந்தும் அகிலம் அமைத்தர்.  

தாயைப் பழித்திடும் பாவம் படர்வதும்.
சேயை ருசிக்கும் அவலம் தொடர்வதும்
கொள்ளை கொலையும் கொள்வதும் தொழிலோ?
கள்ளமும் கலையும் பேணுதும் எழிலோ!!
  
பாவமோ தர்மம்! பலியிடும் சாபமோ!
கோபமோ கர்மம்! கொலைபடும் நாசமோ!
இன்னொரு தூதன் எழுச்சியும் மெய்யாமோ!
பின்னொரு வேதம் புரட்சியும் செய்யாமோ!


கொ.பெ.பி.அய்யா.

   


Sunday, 16 March 2014

எல்லாம் இரண்டே.

எல்லாம் இரண்டே!!

நேரும் எதிரும் நிலவாதிங்கே  
நிசங்கள் இல்லை இயற்கையிலே.
சேரும் சேரா எண்ணாதிங்கே
செம்மை இல்லை படைப்பினிலே.

காற்றும் நீரும் வேண்டாமலே
ஆற்றும் உயிர் இங்கில்லை.
சூடும் குளிரும் தீண்டாமலே
சுகமும் இல்லை பூமியிலே!

கருப்பு வெள்ளை மூலமில்லா
கண்கள் இரண்டில் காட்சியில்லை.
விருப்பு வெறுப்பு விளக்கமில்லா
அற்புதம் ஏதும் இங்கில்லை.

வானும் மண்ணும் இரண்டுமில்லா
வளமுமில்லை இயற்கையிலே
ஆணும் பெண்ணும் இரண்டுமில்லா
வாழ்வுமில்லை படைப்பினிலே.

இன்பம் துன்பம் கலப்பில்லாமல்
இங்கும் வாழ்க்கை இதமில்லை.
காதல் மோதல் உரசாமல்
கடக்கும் பயணம் சுவையில்லை.

இப்படி அப்படி என்றே எல்லாம்
இரண்டு விதமும் சமாதானம்.
பழகும் இலக்கணம் .ஏற்பதால்
பிழையும் சரியே நன்மையெனில்.

எல்லாம் இரண்டாய் இருப்பதினாலே
வல்லான் படைப்பும் வாழுதிங்கே.
அல்லும் பகலும் தொடர்வதினாலே
இல்லை சலிப்பும் இனிதே சுகமே!


கொ.பெ.பி.அய்யா.