விமர்சனமும் விளம்பரமே!
எதுவொன்று திருத்தப்படுகிறதோ
அதுவே தீர்க்கமடைகிறது.
எதுவொன்று விமர்சிக்கப்படுகிறதோ
அதுவே விளம்பரமடைகிறது.
திருத்துவோரும் விமர்சிப்போரும்
தேவனின் தூதுவர்கள்.
வருத்தவோ இதைச் செய்கிறார்!
வண்ணந்தீட்டி வரைகிறார்.
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை
வல்லவராவாரக்கு வரமிது.
வேலையற்ற வேலையோவிது
மாலையேற்றும் விழைவிது.
சுட்டிக்குட்டி வளர்க்கப்பட்டால்
கெட்டியாகி வாழலாம்.
தட்டித்தட்டி திருத்தப்பட்டால்
வெற்றி பெற்றுயரலாம்.
செதுக்குவது சகித்திட்டால்
சிலையாகிச் சீர்படலாம்
இடிப்பாரே இல்லாதான்
கெடுவானே பாவமே!
சமூகக்கவி. கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment