Tuesday, 18 February 2014

சினிமாதான் வாழ்வாமா?

சினிமாதான் உலகமா?

உலகமே சினிமாதானா?
உருப்படியா வேறில்ல்லையா?
சிந்தனையே சினிமாதானா?
சிந்திக்கக வேறில்லையா?

பேட்டியென்றால் சினிமாதானா?
பேசிட வேறில்லையா?
விருதென்றால் சினிமாதானா?
வென்றதே வேறில்லையா?

காக்கவே சினிமாதானா?
காத்திடவேறில்லையா?
போற்றவே சினிமாதானா?
போற்றிட  வேறில்லையா?

வாழ்ந்ததே  சினிமாதானா?
வாழ்த்திட வேறில்லலையா?
வளர்ப்பதே சினிமாதானா?
வளர்த்திட வேறில்லையா?

கவலையே  சினிமாதானா?
கவ்வலைப்பட வேறில்லையா?
நலிந்தோரும் சினிமாத்தானா?
நாதியிங்கு வேறில்லையா?

முன்னேற்றமே சினிமாத்தானா?
முன்னேற்ற வேறில்லையா?
ஊக்கமே சினிமாதானா?
உயர்த்திட வேறில்லையா?

ஆதாரமே சினிமாதானா?
ஆதரிக்க வேறில்லையா?
அரசியலும் சினிமாதானா?
ஆள வேறு ஆளில்லையா?

தொலைக் காட்சிப் பாவமோ!
கோலை செய்யுஞ் சாபமோ!
விளைகிறது கோபமே!
தொலைகிறது காலமே!

விலையேற்றும் விளம்பரமோ!
கலைவிருது  விழாக்களோ!
விலையென்ன தந்தாரோ!
அலைமோதும் சொந்தமே!

எவன் செய்யும் வியாபாரமோ!
இவனுக்கென்ன கொண்டாட்டமோ!
பங்குனக்கும் தருவானோ!
சங்கை ஏன்தான் ஊதுறயோ!

காமராசர் போனதோடு
கர்மநிறம் கருத்ததோ!
தேடவந்த வேடங்களே!
தேடி சுகம் வாழுதே!

சோறு போடும் ஏழையோ!
சேறு பூசிக் கிடக்கிறான்.
அவனையும் நினைத்ததோமா!
அவனும் வாழச்செய்தோமா!

கொ.பெ.பி.அய்யா.








No comments:

Post a Comment