Tuesday, 18 February 2014

கவிஞன் கவலை.

நல்ல பாட்டு....

பாட்டு நல்ல பாட்டுத்தான்.
போட்டுப்பாடு மெட்டுத்தான்.
பாட்டெழுதப் பட்டபாட்டை
கேட்டுப்பாரு கவிஞனை.

எழுத்தை இசையில் கேட்கத்தான்
ஏங்குங் கவிஞன் ஆசையே.
பழுதில்லாமல் விளங்கத்தான்
பாடுங் கவிஞன் கவலையே.

உழைக்கும் மனிதன் பாடத்தான்
உண்மைக் கவிஞன் மகிழுவான்.
பயன்படுமா உலகுக்கென்றும்
பாடுங்கவிஞன் அஞ்சுவான்.

ஐயமின்றிப் பொருள் பொருந்த
ஆய்ந்து கவிஞன் செதுக்குவான்.
பயன்படாமல் கவிதைநின்றால்
பாடுங்கவிஞன் வருந்துவான்.

படைப்பெல்லாம் நலமாகவே
படைப்பாளி முயலுவான்.
படைத்தவனை வணங்கித்தினம்
பாடுங்கவிஞன் உழைக்கிறான்.

கவிஞன்.கொ.பெ.பிச்சையா.






பாட்டு நல்ல பாட்டுத்தான்.
போட்டுப்பாடு மெட்டுத்தான்.
பாட்டெழுதப் பட்டபாட்டை
கேட்டுப்பாரு கவிஞனை.












No comments:

Post a Comment