Monday, 17 February 2014

ஒரு கணம் சிந்தியுங்கள்.!

ஒரு கணம் சிந்தியுங்கள்.!

இனியென்ன இருப்பது எல்லாமே முடிந்ததென
    தோன்றும் பொழுதிலொரு கணம்
நுனிமுனை துணிந்து மறுவழி என்னென்று
    தேடிடச் சிந்தனைக்குக் கொஞ்சம்
பனியளவனுமதித்து ஆலோசிக்க விடுங்கள்.
  பாதை யில்லா ஊர்களே இல்லை.
கனிவருமா காய்வருமா வெனக் காத்திருங்கள்.
    காலம் யாரையுமே கை விடுவதில்லை.

உயிரென்பது விலைக்கு வாங்கும் பொருளோ!
 போனாலது மறுமுறை வருமோ!
மயிரோவது மழித்தலும் நீட்டலும் செய்வதற்கு!
      மரணந் தேடுத்ல் கோழைத்தனம்..
வயிறொன்று தானே வாழ்ந்திடப் பிரச்சனை
     விலங்கைவிடக் கேவலமா மனிதன்!
தைரியம் வேண்டும் தற்கொலைகள் வேண்டாம்.
     வாழ்வதை வாழ்ந்து விட்டுப் போவோம்.

வறுமைக்குப் பயந்து வாழ்ந்திட மறுப்பதோ!
  வகைகாணாது வாழ்வை முடிப்பதோ!
பொறுமை யிழந்த உணர்ச்சி வெளிப்பாட்டால்
    பூமியினீங்கி விடுதலை பெறுவரோ!
பிறர்க்கு மிங்கே யுரிமை காண்பதாரோ!
  தனக்கே தேடுதல் சுயநலமன்றோ!
இறப்பே யெதற்கும் விடையெனக் கொண்டால்
  எதிரியை வென்றிட இருப்பார் யாரோ!

கவிஞர் கொ.பெ.பிச்சசையா.





No comments:

Post a Comment