நிழல்!!!
ஆண்டாண்டாய் ஆண்டாலும்,
ஆடியோடி சேர்த்தாலும்,
மாண்டபின் என்ன வரும்
மண்தானே மூடவரும்.
தீண்டி நீ கொண்டதோ!
தீண்டுந் தீ காக்குமோ!
கூண்டு விட்டுப் பறப்பதோ!.
கோடி கண்டும் நிற்குமோ!
உடன் பிறந்த சோதரனோ!
ஒரு சால் நிலத்துக்கோ!
திடங் கொண்டுங் கொல்வதோ!
தேடியெங்கு போவதோ!
போராடி வாழ்வதேனோ!
பொய்யான மெய் சுகமோ!
ஆறு அடி நிலங்கூட
அடுத்த பிணம் பிடுங்குமோ!
ஆனதெல்லாம் ஆகட்டுமே!
போனதெல்லாம் போகட்டுமே!
நிழல் வாழும் வாழக்கையிதே!
நிசமென்றும் மயங்காதே!
சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment