கைபேசி ஜாக்கிரதை !
பெண்கேட்டு வந்தானென்று
எண்ணையுந் தந்துவிட்டாள்.
பின்விசாரணை செய்வதற்குள்
பெண்ணானாள் அவன்வசமே...
கைபேசி பொல்லாதது.
கண்ணினை மறைத்தது.
பொய்யினைப் பேசிப்பேசி
புத்தியைக் கெடுத்தது.
எத்தனையோ திருமணங்கள்
இப்படித்தான் செய்தானென
இப்போது தெரிந்தபின்
உப்புநீர் ஒழுகவிட்டாள்.
கவிஞர்.கொ.பெ.பிச்சையா..
No comments:
Post a Comment