Monday, 17 February 2014

எதைக் கடக்கிறாய்?

எதைக் கடக்கிறாய்?

சாலையைக் கடக்கிறாயா--உன்
சரித்திரத்தைக் கடக்கிறாயா?
எதைக் கடந்தாலும் வரும்
எமனையும் பார்த்துக்கட!

அபாயங்களோடுதான்-----நாம் 
அன்றாடம் வாழ்கிறோம்.
வெளியில் போனால் வீடு
வருவது உறுதியில்லை!

கவனமுடன் வாழ்ந்தால்----நமது
கணக்குத் தீரும் வரை
கட்டாயம் வாழலாம்,
கடமைகளும் முடிக்கலாம்.

கல்லறை வரைக்கும்----யாரும்
கனவுகளைச் சுமக்காதீர்.
உள்ளபோது முடித்தாலே
உயிருக்கு விடுதலை!

கொ.பெ.பி.அய்யா.





No comments:

Post a Comment