Tuesday, 18 February 2014

பொய்யோ நிசமோ!

பொய்யோ!நிசமோ!

காகிதப் பூக்கள் அங்கே
கடவுளின் சன்னதியில்.
நிசமான பூக்கள் இங்கே
நீசனின் காலடியில்.

பொய்களுக்கு வெட்கம் இல்லை.
பொற்தேரில் ஊர்கோலம் !
மெய்கஐளுக்கு கூட்டமில்லை
மௌனமாய் சவக்கோலம்!

பொய் வாழும் வீணரை
மெய் கூசப் போற்றுகிறோம்.
மெய் தொலைந்து பொய்வாழ
விழைந்துதான் சாகிறோம்.

பூவையரும் ரோசாவை
பூத்ததைச் சூடாமல்
வண்ணப் பூச்சுப் பொய்யதை
பெண் ஏய்க்கச் சூடுகிறாள்.

விளம்பரத்தில் மயக்கியே
விலையைத்தான் கூட்டுகிறார்.
தரமற்ற பொருளைத்தந்து
தலையிலே கட்டுகிறார்.

தந்திரம் செய்வாரெல்லாம்
தன்னிலை உயர்கிறார்..
எந்திரம் ஆனோரெல்லாம்
இத்துயித்தேத் தேய்கிறார்.

பொய்யோ!நிசமோ!பார்த்து
புரிந்திடப் பழகுங்கள்.
உழைத்ததைக் காத்து வைத்து
உருப்படத் துணியுங்கள்.

கொ.பெ.பி.அய்யா






No comments:

Post a Comment