திருமணவன்மைகள்!!55
கல்யாண சாத்திரமெனும்
கயமைத்தனங்களை
கற்றுத்தந்த பாவியெவன்?
வற்றலாய் வறுத்தெடுக்கும்
வன்கொடுமைகளை
வழமையாக்கிய சண்டாளன் யார்?
அவன் எவனாக இருந்தாலும்
அக்கினி கருக்கட்டும்!
கன்னிகா தானமென்று
கன்னியைத் தானம் செய்ய
பெண்ணென்னப் பொருளோ!
தானமாய் பெற்றதை
பேணும் உரிமை கொண்டதால்
தேவைக்கு விற்கவும் வைக்கவும்
தீய்க்கவும் மாய்க்கவும்
துணிவரோ !அய்யகோ!
ஊரறிய உலகறிய
உள்ளங்கள் இணைவதற்கு
ஆரியன் தேவையோ!
காரியம் செய்வதற்கும்
கருமங்கள் தொலைவதற்கும்
கூறிடும் மந்திரங்கள்
ஓதினாலும் புரிவீரோ!
உள்ளதும் அறிவீரோ!
மலரும் குங்குமமும்
மஞ்சளும் சந்தணமும்
பலப்பல தானியங்கள்
பயனுறு பொருளெல்லாம்
அக்கினியில் எரிப்பதும்
அமங்களம் ஆகாதோ!
ஆதிநாள் முளையாதது
பாதியிலேன் நுழைந்ததோ!
பணம் பறிக்கும் மோசடிகள்!
குணம் அழிக்கும் சாத்திரங்கள்!
மனம் முறிக்கும் தட்சனைகள்!
மணம் இழக்கும் வழமைகள்!
ஆடம்பர அக்கிரமங்கள்!
பாரம்பரிய மாற்றங்கள்!
கேடாகும் போக்கிலேதான்
கேட்பாரற்றும் போகுமோ!
பேணிப் பெற்ற குழந்தையோ!
பெண்ணென்ற காரணமோ!
தோணுமோ !அழிப்பதற்கும்
தொல்லை இவ்வன்மைகளால்!
புண்ணியப் பிறவியாம்
பெண்ணினம் சுருங்குதோ!
திண்ணியம் இதுதானோ!
மண்வெறுமை ஆகுமோ!
எத்தனை பெரியார்கள்
இங்கு வந்து பிறப்பனும்
இவர் திருந்தப் போவதில்லை!
என்ன கற்றும் ஆவதில்லை!
கவிஞர்,கொ.பெ.பிச்சையா.
திருமணவன்மைகள்!!55
கல்யாண சாத்திரமெனும்
கயமைத்தனங்களை
கற்றுத்தந்த பாவியெவன்?
வற்றலாய் வறுத்தெடுக்கும்
வன்கொடுமைகளை
வழமையாக்கிய சண்டாளன் யார்?
அவன் எவனாக இருந்தாலும்
அக்கினி கருக்கட்டும்!
கன்னிகா தானமென்று
கன்னியைத் தானம் செய்ய
பெண்ணென்னப் பொருளோ!
தானமாய் பெற்றதை
பேணும் உரிமை கொண்டதால்
தேவைக்கு விற்கவும் வைக்கவும்
தீய்க்கவும் மாய்க்கவும்
துணிவரோ !அய்யகோ!
ஊரறிய உலகறிய
உள்ளங்கள் இணைவதற்கு
ஆரியன் தேவையோ!
காரியம் செய்வதற்கும்
கருமங்கள் தொலைவதற்கும்
கூறிடும் மந்திரங்கள்
ஓதினாலும் புரிவீரோ!
உள்ளதும் அறிவீரோ!
மலரும் குங்குமமும்
மஞ்சளும் சந்தணமும்
பலப்பல தானியங்கள்
பயனுறு பொருளெல்லாம்
அக்கினியில் எரிப்பதும்
அமங்களம் ஆகாதோ!
ஆதிநாள் முளையாதது
பாதியிலேன் நுழைந்ததோ!
பணம் பறிக்கும் மோசடிகள்!
குணம் அழிக்கும் சாத்திரங்கள்!
மனம் முறிக்கும் தட்சனைகள்!
மணம் இழக்கும் வழமைகள்!
ஆடம்பர அக்கிரமங்கள்!
பாரம்பரிய மாற்றங்கள்!
கேடாகும் போக்கிலேதான்
கேட்பாரற்றும் போகுமோ!
பேணிப் பெற்ற குழந்தையோ!
பெண்ணென்ற காரணமோ!
தோணுமோ !அழிப்பதற்கும்
தொல்லை இவ்வன்மைகளால்!
புண்ணியப் பிறவியாம்
பெண்ணினம் சுருங்குதோ!
திண்ணியம் இதுதானோ!
மண்வெறுமை ஆகுமோ!
எத்தனை பெரியார்கள்
இங்கு வந்து பிறப்பனும்
இவர் திருந்தப் போவதில்லை!
என்ன கற்றும் ஆவதில்லை!
கவிஞர்,கொ.பெ.பிச்சையா.
தாயின் தவிப்பு.....
ஏனழுதாய் ஏனழுதாய்
இளவஞ்சி ஏனழுதாய்!
நானழுது ஓயுமுன்னே
ஏனழுதா யென்மகளே!
மேஸ்திரியோ மிரட்டுகிறான்
மேலே வர அழைக்கிறான்
நாளை வேலை யச்சாரமாய்
நான் போக வேண்டுமடி!!
உன்னை நான் வளர்ப்பதற்கு
என்னை நான் இழந்தேனே.
மண்ணாகிச் சிதைந்தேனே
பெண்ணாய் நீ சிறப்பதற்கு. .
நீ வளர்ந்து மங்கையாகி
நிலம் போற்றும் அன்னையாகி!
நான் வாழ்ந்த விதம் மறைய
நலம் வாழக் கண்ணுறங்கு!
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment