பொறுமையுடன் வாழ்க
உழைக்கத்தானே உடம்பிருக்கு
பிழைக்கத்தானே வாழ்விருக்கு
கவலைக்கென்ன தேவையிருக்கு
அவலங்கள் நிகழ்வதற்கு..!
திட்டமிடாச் செலவினங்கள்,
வட்டம் மிஞ்சுந்திட்டங்கள்,
தேவையிலா ஆடம்பரங்கள்,
ஆவதாலே சங்கடங்கள்.
வரவினைக் கணக்கிலிட்டு
செலவினைத் திட்டமிட்டு
நிறைத்திட வாழ்ககையில்
நேருமோ துன்பங்கள்!
திட்டமாய் அடியெடுத்து
எட்டுவதைக் குறிவைத்து
கிடைப்பதைத் தேடினால்
கூடுமோக் கேடுகள்.!
நிலையினை உணர்ந்திட்டு
விலையினை தேர்ந்திட்டு
கடன்படாக் கரந்தொட்டால்
காணுமோ சிறுமைகள்!
பெருமைக்கு மாவிடித்து
வறுமைக்குள் சிக்காமல்
பொறுமையுடன் வாழுங்கள் !
அமையுமே வாழ்வுகள்.!.
கவிஞர்.கொ.பெ.பிச்சையா
No comments:
Post a Comment