Tuesday, 18 February 2014

கற்றதும் கைமண்ணே.

செதுக்குங்கள்  சிலையாகிறேன்..

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

கற்றது  கைம்ண்ணளவே  என
உற்றது சொன்னாள் ஒரு கிழவி.
அந்தக்   கைமண் ணளவாவது
கற்றேனோ  தெரியவில்லையே!!
தலைவாசல் வழியே நுழையவும்
தயங்கித்தான் நானும்   மெல்லப்
புறவாசல் எட்டிப் பார்க்கிறேன்
பாரத்துத்தான்  விட்டீரோ!
நானோ ஒரு பாறாங்கல்தான்........
என்னைப் பார்ததுப்  பார்த்து
பக்குவமாய் செதுக்குவீரானால்
நானுங்கூட  நல்லதோர்
கலைமிளிரும் சிலையாவேனே.
செதுக்குவீர்  ........ செதுக்குவீர்.
சிற்பமாகும்வரை செதுக்குவீர்!!




No comments:

Post a Comment