Monday, 17 February 2014

முயற்சிகளே பயிற்சிகள்.

முயற்சிகளே பயிற்சிகள் !

இறைவனொருவன் இருக்கிறான்,
எல்லாமவனே பார்க்கிறான்,
என்றே வீணே  இருந்திட்டால்;
எந்தப் பருப்பும் வேகாதே.

உணவையுங்கூட  ஊட்டுதற்கு
ஒருவரைத்தேட முயன்றிடனும்.
கனவையுங்கூட காண்பதற்கு
கண்ணுறங்க  முயன்றிடனும்.

செத்துக்கிடந்த எலியையும்
சில்லறையாக்கிய கதையுண்டு=
சில்லறைக் காசுகள்  கட்டாகும்
கட்டுகளுயர்ந்தால்  கனவான்  நீயாகும்..!

செத்த எலியையும் விடவில்லை
விற்றானொரு பூனைக்காரனுக்கு..
விற்றகாசினை வீண்செய்யாமல்
வைக்கோலாக்கி மீண்டும்  விற்றான்..

விற்று  விற்று  வியாபாரியானான்..
வளர்ந்து வளர்ந்து அதிபரமானான்..
முயற்சிகள்தானே பயிற்சிகளாகும்.
பயிற்சிகள்தானே திருவினையாகும்..

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment