சாதுமிரண்டால்?
என்ன அங்கே நடக்கிறது
எனக்கு ஒன்னும் புரியல
மதுக்குடி பிரச்சனையால் !
சீரழியுது குடும்பங்கள்!
பத்தினியும் கொலை செய்வாள்
பழ மொழியும் உண்டென்பார்.
நித்தம் நித்தம் விவாக ரத்து
பத்தினிகள் வழக்கு அவலம்
குடிகாரன் என்பதால் அவள்
கொன்றாள் எனச் செய்திகள்
விடிந்து எழும் போதெல்லாம்
படிப்பதிந்த கொடுமைகள் ! .
பெற்றெடுத்த குழந்தைகளை
குத்திக்கொலை செய்கிறான் .
இத்தனைக்கும் காரணம்
அத்தலையும் மனசுதானோ!
தற்கொலைகள் தினம் தினம்
தவறாமல் செய்திகள்
விற்பனை விபச்சாரங்கள்
வேதனையோ வேதனை!
அடுத்த மனை ஏங்கலும்
கெடுக்கும் குடி நோங்கலும்
அறம்பிறழ்ந்த வாழ்க்கையும்
அவை எமன் காலன் தூதனோ!
சமூகக் கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment