நிழலாகுங்கள்
வேலைகெட்டு கூட்டமொன்று வெளியே சுத்துது
கூலிதேடி தெருக்களிலே பூட்டுடைக்குது.
நடமாடும் ஏட்டியம்மோ பெண்கள் கழுத்து
உடனடி தேவைக்கு நகையறுக்குது.
வெறிபிடித்த நாய்களுந்தான் வேட்டைக்கலையுது
கறிபிடுங்க காத்திருந்து கற்பழிக்குது.
பெண்களென்ன இச்சைக்கான யூஸ்அன்ட்துரோவா
தின்றபின் கொன்றுதான் வீசியெறியுது.
விருப்பமில்லா திருமணங்கள் வருத்தி நடக்குது
விரும்பியது சேரப்பின் கொலைகளாகுது.
கணவனை மனைவியே கொன்றாளென்ற செய்தி
கதைகளும் இப்படித்தான் ஆகிப்போனது .
காணும்பல செய்திக்கு கற்றோரே நாயகர்கள்
கூசுதே கூறவே கோணலெங்கானதோ!!
வேலைதேடி அலைகிறார் வீணாகித்திரிகிறார்
விடியலைத்தேடாது திசைமாறிப் போகிறார்.
திசைமாறும் பறவைகளே தேடுவது விட்டுமே தேடுவோர்க்கு நிழலாகுங்கள்.
சமூக்ககவி.கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment