தருணங்கள்.
நல்ல தருணங்களோ
நாளும் வருவதில்லை.
வல்லவன் இறைவனவன்
வாய் மொழியில்
சொல்வதில்லை.
அருகில் வந்தும் அதுதானே
அமைதியாய் காத்திருக்கும்.
தருணமது நானென்றும்
தப்பட்டம் கொட்டாதே.
எண்ணை விற்கும் வியாபாரி
திண்ணை வந்து ஆறியே
உன்னையவன் தேடுவான்.
ஓராழாக்கு விற்கவே.
வண்ணமாய் பேசுவான்.
வாங்கும்படி செய்யுவான்.
அவனுக்குள் திறமையதும்
அது ஒரு தருணம் சொல்லும்.
தெருவிலொரு தாள் கிடக்கும்
தேடி உன்னை காத்திருக்கும்.
குனிந்து தன்னை எடுக்கச்சொல்லும்.
விரிந்தும் அது கால் தடுக்கும்.
நேரமது கைகூடி நீ எடுத்து
பார்த்திட்டால் யோகம்தான்.
தருணமது தேடி உன்னை
தரும் செய்தி ஒன்றிருக்கும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment