கண்ணீரே ஜீவ நதி!
இறுதிவரை வற்றாத ஜீவ நதியென்றுமே
உருகி ஓடி வருங் கண்ணீர் மட்டுமே!
அதையேனும் விடலாமே ஓடவுங்காலமே!
உணர்வுகள் இங்கு வாழட்டும் பாவமே!
உள்ளத்தின் உணர்வுகளை உள்ளிருந்தானுமே!
சொல்லுமே அடங்காது கண்
வழியக்காணுமே!
கள்ளமில்லா மொழியதுக் கரைவதில்த்தோணுமே!
எள்ளினும்கண்ணீர் நாணுமோப்
பாவமே!
மொழிகளில் இல்லாததது விழிகளில் ஒழுகுமே!
வலியதன் வலிமையை வழிந்துதான் அழுகுமே!
களிப்பிலும் பொங்கியேக் கண்ணீரில்
எழுதுமே!
ஒளிக்கவும் ஆற்றாக் கண்ணீர்ப் பாவமே!
பிரிவினைத் தாங்காது பேசவும் முடியாதே!
உறவினைத் தழுவவும் ஆசையும்
படியாதே!
அறிவினை ஆளவும் வேசமும் நடியாதே!
சொரிவிழிக்கண்ணீர்க் கூறுமேப்
பாவமே!
அழுகை!சிரிப்பு!கோபம்!கொண்டாட்டமே!
உணர்வுஉண்மை காட்டுவதுக்
கண்ணீரே!
புரிவதன் அடையாளம் கடைக்கண்
கசியவே!
எழுமனத் தூறுங் கண்ணீர்ப் பாவமே!
படைபலம் ஒடுக்கும் அடைவளமழிக்குமே!
தடையெதுச்செய்யும் விடையதுக்
காணுமே!
துடைத்திடாக்கண்ணீர் அடைத்திடும் அனைத்துமே!
கடைவிழியோடுங் கண்ணீர்ப் பாவமே!
உழைப்பவன் அழுதிடப் பிழைப்பவன்
நீசனே!
களைப்பதன் முன்னமேக் காப்பவன்
ஈசனே!
விதைப்பவன் கண்ணீர் வீணில்லை
ஏசனே!
விளைவது தர்மக் கண்ணீர்ப் பாவமே!
கருணையின் கடலதுக் கண்ணீரும்
வற்றுமோ!
கடவுளின் கொடையதுச் செந்நீரின்
உற்றமோ!
பொறுமைப் புண்ணியம் மனிதத்தின்
மகிமையோ!
பேணுவீர் சமநலம் கண்ணீர்ப் பாவமே!
கொ.பெ.பிச்சைய்யா.
No comments:
Post a Comment