பழகப் பழகப் பழக்கம்.
படித்துப் பழகு எழுத்து.
எழுதிப் பழகு கிழிப்பு.
கிழித்துப் பழகு வடிப்பு .
தொடுத்துப் பழகு படிப்பு.
படிப்பதொரு வாய்ப்பு.
பழக எழும் துடிப்பு.
படைக்கத் தூண்டும் விருப்பு.
எழுதச் சொல்லும் கிறுக்கு.
கிறுக்கியதைப் பொறுக்கு.
பொறுக்கியதில் சுருக்கு.
சுருக்கியதில் இருக்கு
சுந்தரமாய் படைப்பு..
வானத்தில் பிறபபவனா
வாழுங் கவிஞன் ?
தானத்தில்தானவன்
தளிராய் பிறக்கிறான்.
விரலில் பிறக்கிறான்
வித்தைக் கவிஞன்.
உறவில் பிறந்தவனே
உணர்வில் விளைகிறான்.
பழகப் பழகப் பழக்கம்.
பாமரனும் ஆவான் கவிஞன்.
அழகுத் தமிழே ஆக்கும் .
அதுவே ஆசான் பழக்கும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment