Monday, 17 February 2014

அவரவர் உணர்வு அவரவர் அறிவார்

அவரவர் உணர்வு அவரவர் அறிவார்

ஒன்றாயிருப்போம் ஒவ்வொன்றாய் எழுதுவோம் நன்றே!
ஒவ்வொரு படைப்பும் செவ்வியம் செப்புமவரவர் உணர்வே!
ஒன்றுக்கொன்று உணர்வின் மொழியாம் கொண்டே!
நின்றேயவ்விதம் இவ்விதம் என்றும் தீர்வதும் கடினம்!
செந்நாப்புலவன் வள்ளுவன் உறையும் பலவிதமே!

மென்றும் தின்றும் சுவைப்பதும் விமர்சனம் ஆகும் பலமே!
உண்டுமதிலும் ஒவ்வும் ஒவ்வாச்சொற்களும் கலப்பாவே!
என்றாலும்கூட இனிக்கும் சொல்லாம் இவ்விதம் அவ்விதம்-- 
இருந்தால் நலமாம் எனும் மென்மைப் பகிர்வும் பவ்வியமாம்.
என்றும் பழகும் அன்பில் வளர்தல் சுகமாம் சுபமாம்.


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment