Tuesday, 18 February 2014

தப்பூந் தவறும்

தர்மப்படி வாழ்ந்தால் என்ன

தப்பைத் தப்பாகாது செய்வாயோ! தவறைத் தவறாகாது செய்வாயோ!
குற்றத்தைக் குற்றமாகாது செய்வாயோ!
வெற்றியும் உண்டோ சொல்!எதைச் செய்தும் தப்புவாயோ!
எங்கே நீயும் ஒளிவாயோ!

அப்புறம் ஏன் அதைச் செய்வாய்அதனால் என்ன நன்மை ஆவாய்?
இன்று நீ கொலை செய்கிறாய்நாளை நீயே கொலை யாவாய்எத்தனை நாட்கள் வாழ்கிறாய்எமனும் உன்னை விடுவானாஎதைத்தான் சாதித்தாயோஇப்புவிதான் நிலையாகுமோ ? வாழ்வதே கொஞ்ச நாட்கள்வாழும் வரைவாழ்ந்து போ.
தர்மப்படி வாழ்ந்தால் என்னதடைகள் உண்டோ சொல்லுங்கள் !கர்மசுத்தி கடைப்பிடித்தால் கடவுளின் பிள்ளையாவாய்.
பிறர்க்கின்னா செய்வதால் பெருமை என்ன காண்பாயோஎன்ன இங்கு கொண்டு வந்தாய்எதை அங்கு எடுத்துச் செல்வாய்?
கொ.பெ.பி.அய்யா .





No comments:

Post a Comment