தேடுகிறேன்........................!
வரிகளைத் தொலைத்து விட்டு
வார்ததைகளைத் தேடுகிறேன்.
மொழியினைத் தொலைத்துவிட்டு
முகவுரை தேடுகிறேன்.
வழிகளைத் தொலைத்துவிட்டு
வாசலைத் தேடுகிறேன்.
நெறிகளைத் தொலைத்துவிட்டு
நிம்மதி தேடுகிறேன்.
வரவினைத் தொலைத்துவிட்டு
வாழ்வினைத் தேடுகிறேன்.
மரபினைத் தொலைத்துவிட்டு
மாண்பினைத் தேடுகிறேன்.
பண்பினைத் தொலைத்துவிட்டு
அன்பினைத் தேடுகிறேன்.
பரிவினைத் தொலைத்துவிட்டு
பாசத்தை தேடுகிறேன்.
ஒழுக்கத்தைத் தொலைத்துவிட்டு
உறவினைத் தேடுகிறேன்.
மனிதனைத் தொலைத்துவிட்டு
மரியாதை தேடுகிறேன்.
கற்றதைத் தொலைத்துவிட்டு
மற்றதைத் தேடுகிறேன்
உற்றதைத் தொலைத்துவிட்டு
உணவுக்குத் தேடுகிறேன்.
காதலைத் தொலைத்துவிட்டு
கண்ணீரைத் தேடுகிறேன்.
கண்ணுறக்கம் தொலைத்துவிட்டு
கனவினைத் தேடுகிறேன்
மனதினைத் தொலைத்துவிட்டு
மதுவினைத் தேடுகிறேன்.
உடலினைத் தொலைத்துவிட்டு
உயிரினைத் தேடுகிறேன்.
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment