Monday, 17 February 2014

இதுதான் சுழற்சியோ!

இதுதான் சுழற்சியோ!

விண்ணுக்குள் மறைந்தேனோ!
வேண்டி நானுங் கேட்டேனோ!
பெண்ணுக்குள் விதைத்தானோ!
பிள்ளையாகி விளைந்தேனோ!

விளைந்து என்ன தந்தேனோ!
வீணாகிப் போனேனோ!
மணியானால் விதைதானோ!
மறுபடியும் முளைப்பேனோ!

மண் புதையும் நாளதுவோ!
மீண்டும் விதை தேறுதற்கோ!
விண்ணேகி வேண்டுதற்கோ!
என் தாயில் பிறப்பதற்கோ!

சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா..




No comments:

Post a Comment