Sunday, 16 February 2014

வெக்கம்..........

வெக்கம்.............!

வெக்கம் கெட்டவன் விளங்கவே மாட்டான்.
விளங்க மறுப்பவன் வெக்கப்பட மாட்டான்.
இறுக்கம் திறந்தால் வெக்கம் பிறக்கும்.
வெக்கம் இருந்தால் வினையும் சிறக்கும்.

வெக்கம் அது இல்லை யானால்
வேட்டி கட்ட மறந்தி ருப்போம்.
பக்கம் கொஞ்சம் இருப்பதால்தான்
பைத்தியனும் மானங் கொண்டான்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் வெக்கம் பொதுவாம்.
அழகும் உணர்வும் அமைக்கும் அதுவாம்.
அக்கம் பக்கம் அருமை துதிக்கும்
வெக்கம் தன்னைத் தானே மதிக்கும்.

ஆணுக்கு வெக்கம் அடிமை விடுக்கும்.
அவனில் வீரம்  வெளி மறைக்கும்.
மானம் என்பது வெக்கம் கொடுக்கும்.
தானம் தன்வழி தர்மம் நினைக்கும்.

பெண்ணுக்கு வெக்கம் பிறவியில் பிறக்கும்.
பிழைகள் கெடுவதில் துணையாய் இருக்கும்.
அடக்கம் என்பதை அதுதான் அளிக்கும்.
கிடைக்கும் பெருமைக் கொடை கொழிக்கும்.

அழுத்தம் இளக்கும் வெக்கம் வாழ்க!
திருத்தம் பழக்கும் வெக்கம் வாழ்க!
ஒழுக்கம் விளக்கும் வெக்கம் வாழ்க!
அருத்தம் துலக்கும் வெக்கம் வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.


குறிப்பு.:இத்தளத்தில் ஒரு நாள் விட்டு மறுநாள் எனும் முறையில் தொடர் நாவலாக “கரிசல் மண்ணில் ஒருகாவியம்”வெளியாகி வருகிறது.இப்போது
ஒன்பதாவது தொடர் பெரியார் சிந்தனையாக வெளியாகி உள்ளது படித்துச்
சொல்லி படைப்பை வளம் கூட்ட உதவி அருள் செய்வீராக.

No comments:

Post a Comment