Monday, 17 February 2014

உமக்கே சமர்ப்பணம்.

உமக்கே சமர்ப்பணம்.

பழைய நணபர்கள் பறந்தனர்.
புதிய தோழர்கள் கிடைத்தனர்.
கிடைத்தவர்கள் தொடர்வதற்கு
கடவுளையே கெஞ்சுகிறேன்.

எழுத்துச் சோலை நண்பர்களே!
ஏற்ற நிழலுந் தந்தீரே!
ஆயிளுந்தான் கூடியதே!
சேயாகித் துளிர்த்தேனே!

பழுதேதுங் கண்டதிலே
திருத்தங்கள் செய்தீரே!
பாதை கூட்டி ஆதரித்து
பயனுறச் செய்தீரே!

பாராட்டுப் பத்திரம்
சீராட்டித் தந்ததை
நேராக உம் அன்பில்
ஆக்கினேன் சமர்ப்பணம்.

ஆயிரம்  படைப்பதற்கும்
அதுவரை வாழ்வதற்கும்
அருளாசி வழங்க வேண்டி
அன்பர் உம் நிழல் படிந்தேன்.

கொ.பெ.பி.அய்யா

No comments:

Post a Comment